பக்கம்:உருவும் திருவும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 உருவும் திருவும்

துன்பமென்னும் கடலை கடக்குங் தோணி யவன்பெயர் சோர்வென்னும் பேயை யோட்டுஞ்

சூழ்ச்சி யவன்பெயர் அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பெயர் ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்

அறிகுறி யவன் பெயர்

என்று பாடியுள்ளமையும் காண்க.

“சென்னை ஜனசங்கம்’ என்ற சங்கமும், ‘பாரத பந்தர்’ என்ற பண்டகசாலை ஒன்றும் பாரதியாரால் சென்னையில் தொடங்கப் பெற்றன. ஆனால், இவை நன்முறையில் செயற் படவில்லை.

“இந்தியா பத்திரிகை ஊர்கள் தோறும் சென்று உலாவி வந்தது. அரசாங்கத்தார் தம் அடக்குமுறையை ஏவினர். அது பொழுதே வ. உ. சி., சுப்பிரமணிய சிவா முதலானேர் துரத்துக்குடிக் கலகம் காரணமாகக் குற்றஞ் சாட்டப் பெற்றுச் சிறையில் வைக்கப்பட்டனர். தன் மீதும் ஒரு வாரண்டு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட பாரதியார், எங்கே தம்முடைய இணையற்ற பத்திரிகைத் தொண்டிற்குப் பழுது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, அப் பணியினை எப்பாடு பட்டாவது நடத்தினுல்தான் நாட்டு மக்களை அடிமை உணர்விலிருந்து தட்டி யெழுப்பலாம் என்று முடிவுசெய்து, குடும்பத்தைத் துறந்து இரவோடிர வாகப் புதுவை மாநகர் சென்றடைந்தார். அங்குப் பல இன்னல்களுக்குப் பாரதியார் ஆளானர். புதிய இடமும் குழ் நிலையும் ஒரு புறம்; போலீஸ் தொல்லை பிறிதொரு புறம்: பொருளிலாத் துன்பம் மற்றாெரு புறம். இவ்வளவும் பாரதியார் துன்பத்தினைப் பெருக்குவித்தன. இதனிடையில் இந்தியா பத்திரிகையையும் எவ்வாருே நடத்திவந்தார்.