பக்கம்:உருவும் திருவும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 உருவும் திருவும்

வல்லுநர்-ஜகதீச சந்திர போஸ் எழுதியிருந்த தாவர நூலினைத் தமிழில் ‘ஜீவ வாக்கு என்ற தலையங்கத்துடன் வெளியிட்டமை பாரதியாரின் மொழிபெயர்க்கும் ஆற்றலைக் காட்டும்.

புதுச்சேரி வாழ்வு பாரதியாருக்கு மெல்லக் கசந்தது. தம் சொந்த ஊரையும் நண்பர்களையும் காணவேண்டும் என்ற வேட்கை மிகுந்தது. 1919 ஆம் ஆண்டு தம் மனைவியுடன் புதுவையை விட்டுக் கிளம்பிக் கடலூர் வந்தார். போலீஸ் அதிகாரிகள் அங்கே அவரைக் கைது செய்தனர்; சின்னட்கள் கழித்து விடுதலை செய்தனர். சென்னை வந்து சேர்ந்த பாரதி யாருக்குச் சில ஊர்களில் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற அரசினர் ஆணை பிறந்தது. இதஞல், தம் மனைவியின் சொந்த ஊரான கடயம் கிராமத்திற்குச் சென்று சில காலம் வாழ்ந் தார். அங்கே ஊர் மக்களிடம் சமத்துவ அன்பு காட்டி வாழ்ந்தார். இது வைதிக நோக்குடையோருக்கு வெறுப்பை முட்டியது.

பின்னர், பாரதியார் எட்டையபுரம் சென்று தங்கினர். பழகிய இடங்களையும் பழைய நண்பர்களையும் நெடுநாட் களுக்குப் பிறகு பார்த்ததில் பாரதியாருக்குப் பெருமகிழ்வு ஏற்பட்டது. இதன் பின்னர்ப் பாரதியார் ஆழ்வார்கள் பாடல் பெற்ற அருந்தலமாகிய திருவல்லிக்கேணியிலே வந்து தங்கி வாழத் தொடங்கினர். நாள்தோறும் பார்த்தசாரதி திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு ஆற்றிவருவது பாரதியார் வழக்கம் அல்லிக்கேணி அழகன ஆராதித்த பிறகு பிரசாதப் பொருள்களாகிய பழம், தேங்காய் முதலி யனவற்றைக் கோயில் யானைக்குக் கொடுத்து மகிழ்வார். அவ்வாறே ஒருநாள் சென்ற பொழுது யானை மதங்கொண்டு மதி திரிந்து சங்கிலியாற் பிணிக்கப்பட்டுக் கிடந்தது. இதனை அறிய மாட்டாத நம் கவிஞரேறு வழக்கம் போலப் பிரசாதப் பொருள்களைக் கொடுக்கச் சென்றார், யானை தன் கொம்பால் சிலுப்பி யெடுத்துக் கீழே தள்ளிவிட்டது. பாரதியாருக்கு நல்ல காயம்! நிலை குலேந்து விழுந்து விட்டார். யானையின்