பக்கம்:உருவும் திருவும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உருவும் திருவும்

வன் மனத்தில் எழுப்புகின்றானே, அந்த அளவில்தான் மதிக்கப் பெறுவான். மக்களுக்கு நல்லொழுக்கம் புகட்டுவதற்கு அரிய கருவியாகத் துலங்குவது இலக்கியமே எனலாம். இந்த எண்ணங்களையெல்லாம் மனத்தில் இருத்திப் பார்க்கும்பொழுது தமிழில் புறப்பொருள்பற்றி எழுந்த புறநானூறு, தான் விளக்கவந்த மறப்பண்புகளை மட்டும் அன்றி, அறப்பண்பு களையும் அழகுற விளக்குவதாயுள்ளது வியந்து போற்றற்குரி யது. கால வெள்ளத்தால் கணக்கற்ற ஆண்டுகள் முற்பட்ட புறநானுாற்றில் காணப்படும் அறக்கருத்துக்கள் சிலவற்றினை இவண் ஒரு சிறிது காண்போம்.

குறிக்கோள் இல்லாத வாழ்வு:குறைவுடைய வாழ்வாகும். நல்ல கொள்கைகள் நம்மை வழிநடத்திச் செல்லவேண்டும். ‘குறிக்கோளிலாது கெட்டேன்’ என்பர் வாகீசப் பெருந்தகை. அச் சீரிய பெரியாரே அவ்வாறு கூறுவராயின் மற்றவர் வாழ்வினை எவ்வாறு நினைக்க இயலும்? அறத்தை முதன்மை யாகக்கொண்டு அதன் நெறியில் நம்பிக்கை வைத்து நிலையாக வாழவேண்டுமென்ற உண்மை புறநானுாற்றின் பல பாடல் களில் விளக்கப் பெறுகின்றது.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல

-புறம்: 1: 1, 2.

என்று சோழன் நலங்கிள்ளிக்குக் கோவூர்கிழார் அறவுரை புகன்றுள்ளார். அம் மன்னனையே, உறையூர் முதுகண்ணன் சாத்தளுர் என்ற புலவர்,

அறனும் பொருளு மின்பமு மூன்றும் ஆற்றும் பெருமகின் செல்வம் ஆற்றா மைகிற் போற்றா மையே

-புறம்: 28: 15-17,