பக்கம்:உருவும் திருவும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் கூறும் அறம் 27

என்று பாடி, அறத்தின் வழியில் அவன் நிற்க வேண்டிய நெறி யினைப் புலப்படுத்தியுள்ளார்.

அறிவிற் சிறந்த ஒளவைப் பிராட்டியார். அறத்தின் வழியே ஆற்றப்பெறும் நல்வினையொன்றே உயிர்க்கு நாளை உறுதுணே நிற்கும் என்று வற்புறுத்தியுள்ளார் :

வாழச் செய்த கல்வினை யல்லது ஆழுங் காலைப் புனைபிறி தில்லை *

-புறம்: 367: 10, 11.

இப் புலவரே பிறிதோரிடத்தில் நிலனே! நீ நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும், மேடாக இருந்தாலும் இருப்பாயாக, எவ்வாருயினும் எவ். விடத்து ஆண்மக்கள் நல்லவராயுள்ளரோ அவ்விடத்து நீயும் நல்லை; அஃதல்லாது நினக்கென ஒரு நலமில்லை என்று பாடியுள்ளமை கொண்டு மனிதப் பண்பாட்டின் மாண்பினைத் தெற்றெனத் தெளியலாம் :

நாடா கொன்றாே காடா கொன்றாே

அவலா கொன்றாே மிசையா கொன்றாே

எவ்வழி கல்லவர் ஆடவர்

அவ்வழி நல்ல வாழிய கிலனே, - புறம்: 187

நன்னெறியில் நடந்து இவ்வுலகிலேயே புகழினைப் பெற்றவரே மறுமையுலக இன்பமும் மட்டின்றிப் பெறுவர் என்பதனைப் புலவர் மோசிகீரளுர் உணர்த்தியுள்ளார் :

இவண் இசை யுடையோர்க் கல்லது அவனது

உயர்நிலை யுலகத்து உறையுள் இன்மை.

-புறம்: 50: 14, 15.

இது குறித்தே திருவள்ளுவரும்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு --திருக்குறள்: 2.31.

என்று கூறிப் போந்தார்.