பக்கம்:உருவும் திருவும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உருவும் திருவும்

கல்வியின் இன்றியமையாமையினை வள்ளுவர்,

கண்ணுடைய ரென்பவர் கற்றேர்: முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்

என்று கவினுறப் புலப்படுத்தியுள்ளார். புறநானுாறும் இக் கருத்தின வலியுறுத்துகின்றது. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாட்டொன்று கொண்டு இதனை அறியலாம். ‘தன் ஆசிரியர்க்கு ஒர் ஊறுபாடு வந்துற்ற வழி அது தீர்த்தற்கு உடன் ஓடிவந்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும், வழிபாட்டு முறைமை யினின்றும் வெறுத்து நீங்காது கற்றல் ஒருவர்க்கு அழகி தாம். ஏனெனின், பிறப்பு ஒரு தன்மையாக அமைகின்ற ஒருவயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வியின் சிறப்பால் பெற்ற தாயும் மனம் வேறுபடுவாள். ஒரு குடியில் பிறந்த பலருள்ளும், மூத்தோனே வருக என்னுது அவருள் அறிவுடையோன் எவனே அவன் சென்ற நெறியிலேயே அரசனும் செல் வான். வேறுபாடு தெரிந்த நாற்குலத்துள்ளும் கீழ்க்குலத் துள் ஒருவன் கற்றால், அவனைக் கீழ்க்குலத்தவனென்று பாராது அவனிடத்தில் குடிகொண்டுள்ள கல்வியின் பொருட்டு, மேற்குலத்துள் ஒருவன், அவனிடத்தே சென்று வழிபடுவான்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வழகிய பாடல் வருமாறு :

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் கன்றே: பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடை யோஸ்ரீ அரசும் செல்லும்: வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்