பக்கம்:உருவும் திருவும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உருவும்"திருவும்

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

-புறம்: 204: 1-4.

என்ற பாடல் குறிக்கின்றது.

அக்கால மக்கள் தாம் மட்டும் வாழ்ந்து மற்றவர் வீழ வேண்டுமென்று விரும்பினர் அல்லர். தமக்குக் கிடைத்த பொருளையும் பிறர்க்கு மகிழ்ச்சியுடன் தந்து பெருவாழ்வு வாழ்ந்தனர்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

-திருக்குறள்: 212.

என்ற குறளின் கருத்துரை கடலுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி பாடிய புறநானுாற்றுப் பாடல் ஒன்றில் பிறங்குகின் றது. இந்திரர்க்குரிய அமிர்தமே இயைவதாயிருப்பினும் அஃது இனிதென்று தனித்து உண்டலுமிலர்: யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சுவனவற்றிற்குத் தாமும் அஞ்சி, மடியின்மையின்றி வாழ்வர். புகழ் கிடைப்பதாயின் தம் இன் னுயிரையே ஈவர்; பழியென்றால் உலகம் முழுவதுமே கிடைப் பதாக இருந்தாலும் கொள்ளமாட்டார். மனக்கவற்சி யில்லார்; அப்பெற்றியுடையார் தமக்கென முயன்று வாழாது பிறர் துன்பம் துடைக்கவெனத் தம் வலிய முயற்சியினை மேற் கொள்ளுதலால் உலகம் நிலைத்திருக்கின்றது’ என்பதே கீழ்க் காணும் அப்பாடலின் பொருளாகும்.

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்