பக்கம்:உருவும் திருவும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் கூறும் அறம் 3]

உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே.

-புறம்: 182.

நிலையற்ற இவ்வுலகில் நிலைத்து நிற்பது புகழ் என்று கண்டு தெளிந்து, அதற்கியைய வாழ்ந்தனர் தமிழர் என்ற செய்தி,

மன்ன வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே

என்ற புறப்பாட்டின் பகுதிகொண்டு தெளியலாம்.

வறுமையின் பிடியில் பெரிதும் வாட்டமுற்றார் புலவர் பெருஞ்சித்திரளுர். ‘நூல் விரித்தன்ன துைப்பினளாம்’ அவர்தாய் கோல் காலாகக் குறும்பல வொதுங்கி நடந்தாள். அவர் மனைவியோ பசியால் வாட்டமுற் றிளைத்த தன் குழந் கைகள் முகம்நோக்கிக் கவன்றாள். இப்படிப்பட்ட துன்ப நிலையில் முதிரமலைக்குத் தலைவனும் குமணவள்ளலை நாடிஞர் புலவர். அவன் புகழ் பாடிப் பெரும்பொருளைப் பரிசாகப் பெற்றார். ஊர் திரும்பி வந்ததும் தன் மனைவியினை நோக்கித் தாம் பரிசாகப் பெற்ற பொருளினை அவள் விரும்பியவர் கட்கும். அவளை விரும்பியவர்கட்கும், கற்பினையுடைய மூத்த மகளிர்க்கும், கொண்ட அளவே குறித்துத் திரும்பப் பெற்றவர்க்கும், மற்றும் இன்ன தன்மையர் என்று கருதாது, தன்னெடும் கூடி உசாவுதலையும் செய்யாது. நாளை நலமாக வாழ்வோம் என்ற எண்ணத்தில் பொருளைச் சேமித்து வையாது. எல்லோர்க்கும் அதனை வாரி வழங்குவாயாக’ என்று கூறும் புறப்பாடல் தனக்கென வாழாத தகை யுடைமையினையும், பிறர்க்கென வாழும் பொதுநலத் தினையும் புலப்படுத்துகின்றது.