பக்கம்:உருவும் திருவும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+

புறம் கூறும் அறம் 33

கொள்பவர்போலத் தம் குடிமக்களைக் கண்ணினைக் காக்கும் 1மைே ால் காத்தான்.

போரிலும் அறநெறி ஒம்பிய நாடு தமிழ்நாடு. ‘தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத பசுவும், எவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுகும் அறவோராம் பார்ப்பன மாக்களும், பெண்களும், நோய்வாய்ப் பட்டோரும், தென்புல வாழ் நாக்குப் பிண்டச்சோறு வழங்கப் பிள்ளைகள் பெருதவர் களும், போர் தொடங்குவதற்கு முன்னல் பாதுகாப்பான இடம் சேர்ந்துவிட வேண்டும் என்று அறத்தின் வழியே மறத் துறையில் ஆணை விடப்படும் என்பதனை நெட்டிமையார் என்ற பெண்பாற் புலவர் பின்வருமாறு பாடுகின்றார் :

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம்.

-புறம்: 9:1-6.

பசு, பார்ப்பனர், சிறப்பினை வள்ளுவர்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்

-திருக்குறள் : 560.

என்ற குறளால் புலப்படுத்தியுள்ளார்.

விடுகில மருங்கின் படுபுல் ஆர்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோ டருள்சுரங் தூட்டும்

-மணிமேகலை: 13:51-54.

o

تكساس.ه 5 . يع