பக்கம்:உருவும் திருவும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 உருவும் திருவும்

வம்’ என்பதற் கிணங்க, அப்படியே தம் காப்பியங்களிலும், பிற பல பாடல்களிலும் கையாண்டுள்ளனர். சான்றாக, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் தாம் இயற்றிய மணிமேகலை என்னும் தமிழ்க் காப்பியத்தில்,

தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை தேருய்

-மணி : சிறைசெய் காதை : 59-61.

எனத் திருக்குறளை அப்படியே பெய்து தந்துள்ளார். இத் தொடர் பிற்காலப் புலவர் பெருமக்கள் திருவள்ளுவருக்குத் தந்த சிறப்பினை விளக்குகின்றது.

திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தினரும் தம் தம் சமயத்தினைச் சார்ந்தவர் என்று:பெருமையோடு கூறிக்கொள் கின்றனர். திருவள்ளுவர்க்கு நாயனர் என்ற பெயரும் உண்டு. இதலுைம் எண்குணத்தான்’ என்ற சொல்லையும், பொறி வாயில் ஐந்தவித்தான் என்ற சொல்லையும் திருக்குறளில் காண முடிகின்றமையானும், திருவள்ளுவரைச் ‘சைவர்’ என்பர் சைவ அன்பர்கள். தாமரைக் கண்ணுன் உலகு என்ற தொடர் கொண்டு திருவள்ளுவரை வைணவர் என்று காட்டு வர் வைணவ பக்தர்கள். அவ்வாறே மலர்மிசை ஏகினன்” அறவாழி அந்தணன்’ என்ற தொடர்கள் கொண்டு சிலர் ‘சமணர்” என்றும் பெளத்தர் என்றும் கூறுப. ஆயினும் இவரைக் குறிப்பிட்டதொரு சமயத்தினைச் சேர்ந்தவர் என்று கூறுதல் அடாது; அது குறிப்பிட்ட எல்லேக்குள் திருவள்ளுவர் பெருமானை அடைத்து விடுவதாகும். எனவே, வள்ளுவர் உலகத்தார் அனைவருக்கும் பொதுவானவர் என்றும், அவர் வழங்கிய வான்மறை உலகப் பொதுமறை என்றும்

கொள்ளுவது பொருத்தமுடைத்தாகும். இந்த உண்மையினே,