பக்கம்:உருவும் திருவும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவும் திருவும்

திருவள்ளுவருக்கு நாயனர். தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனர். மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் முதலிய பல பெயர்களை அக்காலப் புலவர்களும் மக்களும் வழங்கியுள்ளமை, அவர்கள் அப்பெருந் தகைமேற் கொண்ட பெரும்பற்றினையும் மதிப்பினையும் புலப் படுத்தா நிற்கும். இது போன்றே திருக்குறளுக்கும் முப்பானுால், உத்தர வேதம், தெய்வ நூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொது மறை முதலிய பெயர்கள் வழங்குகின்றமை அறிந்து மகிழ்ந்து பாராட்டற்குரியது. புற நானு ற் றில் நெட்டிமையார் பாடலில்,

ஒருவன் செய்தி கொன்றாேர்க்கு உய்தி யில்லென அறம் பாடிற்றே ஆயிழை கணவ

என வரும் தொடர் கொண்டு, இத்தொடர்,

எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற குறளைக் குறிப்பாகக் கொண்டு, அதனல் திருக் குறளுக்கு ‘அறம்’ என்ற பெயரும் வழங்கியிருக்க வேண்டும் என்பர். மேலும் திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர் நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள். காளிங்கர் ஆகிய பதின்மர் உரை எழுதியிருந் தனர் எனத் தெரியவருகிறது. இவ்வாறு பதின்மர், தமிழில் திருக்குறள் தவிர, வேறு எந்நூலிற்கும் உரை கண்டதாகத் தெரியவில்லை. இது திருக்குறளுக்கு மட்டுமே இயைந்ததொரு சிறப்பாகும். ஆயினும், இன்று இப் பதின்மர் உரையில் மணக்குடவர், பரிதி, பரிமேலழகர், காளிங்கர் ஆகிய நால்வர் எழுதிய உரை மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. இவற்றினும் பரிமேலழகர் உரையே பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்று, இன்று பெருக வழங்குகின்றது. இவ் வுண்மை, * -