பக்கம்:உருவும் திருவும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழங்கிய வான்மறை 41

றுள்ளார். செல்வத்துட் சிறந்த செல்வம் அருட்செல்வமே என அறுதியிட்டுரைக்கின்றார். கொல்லான் புலாலை மறுத் தானக் கைகூப்பி உலகத்து உயிர்களெல்லாம் தொழும்” என்று புலால் மறுத்தலின் சிறப்பினை அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளார். ஏனெனில், சங்ககாலத் தமிழர் ஒரு சிலர் வாழ்வில் புலால் உணவு கொள்ளல், கள்ளுண்ணல், வரை வின் மகளிரை நாடிச் செல்லல் முதலிய தீய செயல்கள் இடம் பெற்றிருந்தன. இத்தகு தீய பண்புகளை முதன்முதலில் கண்டித்து அறவுரை புகன்ற சான்றாேர்-புரட்சியாளர்

திருவள்ளுவரே ஆவர். கள்ளுண்போர் சான்றாேரால் எண்ணப் படாதவராவர் என்று கூறிக் கள்ளுண்ணலின் புன்மையை உணர்த்தியுள்ளார். பொருட் பெண்டிர்

பொய்ம்மை முயக்கத்தினைக் கடிந்துரைத்த திருவள்ளுவர், பிறன்மனை நோக்காத பேராண்மையினை ஆன்ற ஒழுக்க மாகக் கூறியுள்ளார். மருதத்திணைக்கும் இடம் தராமல் காமத்துப்பாலைப் பாடியுள்ள சிறப்பு வள்ளுவரின் தனிச் சிறப் பாகும.

பொருட்பாலில் வள்ளுவர் வழங்கும் அரசியற் கருத் துக்கள் காலங் கடந்தும் எண்ணி மதிக்கத் தக்கனவாகும்.

படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு

என்று ஒரு மன்னனுக்கு வேண்டிய அங்கங்களை விளங்கச் சொல்லியுள்ளார். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கூறிப்போந்த அரசியற் கருத்துக்கள் இன்றும் பொருந்து வனவாயுள்ளமை அவர்தம் நுண்மாண் நுழை புலத்தினை நுவலா நிற்கும். வள்ளுவர் கண்ட சிறந்த நாட்டினை,

உறுபசியும் ஓவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு

என்னும் குறளால் அறியலாம்,