பக்கம்:உருவும் திருவும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மென்மையும் வன்மையும்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவி கண்ணகியாவள். கண்ணகியின் கற்பு மேம்பாடு கதை முழுதும் பரக்கப் பேசப்படுகின்றது. கற்பின் சிறப்பினை விளக்கத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினை எழுதி ளுரோ எனும் அளவிற்குக் கண்ணகியின் கற்பின் மேன்மை கிளத்திக் கூறப்படுகின்றது. மேலும் சிலப்பதிகாரம் எழுந்த தற்குச் சிலம்பின் பதிகம் மூன்று காரணங்களைக் காட்டு கின்றது.

அரைசியல் பிழைத்தோர்க் கறம் கூற் ருவது உம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை உருத்துவங் தூட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்.ஓர் பாட்டுடைச் செய்யுள்

-சிலப்: பதிகம்: 55-60.

என்ற பதிகத் தொடர்கொண்டு சிலப்பதிகாரத்தின் மூன்று நோக்கங்களில் ஒன்று, பத்தினிக் கடவுளே உயர்ந்தோர் போற்றி வழிபடுவர் என்பதாகும்.

இந்த நோக்கத்திற் கியையவே கண்ணகியின் வரலாறு கூறப்படுகின்றது. சோழநாட்டின் காவிரிப்பூம் பட்டினத்தில் மாநாய்கனின் மகளாகத் தொடங்கி, கோவலனுடைய மனைவியாக வளர்ந்த கண்ணகியின் வாழ்வு, பாண்டிநாட்டின் மதுரையம்பதியில் கைம்பெண்ணுய்த் திக்கற்று நின்று, நகரை நெருப்பிற் கிரையாக்கி விட்டு, இறுதியில் சேர