பக்கம்:உருவும் திருவும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 4?

பின்னர்த் திருமணக் கோலத்தில் கண்ணகியினைக் காட்டு ன்ெருர். அதுபோதும் அடிகள்,

லே விதானத்து கித்திலப்பூம் பங்தர்க்கீழ்

வானூர் மதியம் சகடணைய வானத்துச்.

சாலி யொருமீன் றகையாளை

-சிலப் : மங்கல வாழ்த்துப்பாடல் : 49-51.

என்று கண்ணகியினை அருந்ததி போன்ற கற்புடையவள் என்று மீண்டும் நினைவூட்டுகின்றார். அதே மங்கல வாழ்த்துக் காதையின் இறுதியில், மூன்றாவது முறையாக,

போதொடு விரிகடந்தற் பொலனறுங் கொடியன்னர் காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கெனவேத்திச் சின்மலர் கொடுதுரவி அங்கண் உலகின் அருந்ததி யன்னளை மங்கல நல்லமளி யேற்றிஞர்

-சிலப் : மங்கல வாழ்த்துப் பாடல்: 60-64.

என்று கூறியிருப்பது உற்று உணரத்தக்கதாம். இவற்றால் இளங்கோவடிகளின் உள்ளம் கண்ணகியின் கற்பு மேம்பாட் டினைச் சிறப்பித்துப் பாடுதலில் பெரிதும் ஈடுபட்டுள்ளது எனலாம்.

அடுத்து மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் மென்மையினை இளங்கோவடிகள் புலப்படுத்துகின்றார். கோவலன் பாராட்டுகின்ற உலவாக் கட்டுரை இதனைச் செவ்விதிற் புலப்படுத்தும். ஆனால், கலையுள்ளம் கொண்ட கோவலன், ஆடலும் பாடலும் அழகும் என்று இங்குக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் இலங்கிய மாதவியைக் கண்டான். கண்ட அளவிலேயே நெஞ்சைப் பறிகொடுத் தான். எனவே, மாமலர் நெடுங்கண் மாதவிமாலையினைக் கூனி கையிலிருந்து வாங்கி, மாதவியின் மணமனை புகுந்து, மாதவி

யுடன் அனைவுற்ற அந்தப் பொழுதிலேயே அயர்ந்து மயங்கி