பக்கம்:உருவும் திருவும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உருவும் திருவும்

விடுதல் அறியா விருப்பினளுகித் தன் வடு நீங்கு சிறப்பினை யுடைய மனைவியாம் கண்ணகியை மறந்தான். இதனல் கண்ணகியின் வாழ்வு அவலம் கண்டது. இதனை ஆற்றாமை யோடு எடுத்து மொழிகிறார் இளங்கோவடிகள்.

பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிரும் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி

-சிலப்: அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை: 54-57,

என்று கூறிக் கண்ணகியின் நிலைக்கு இரங்குகிரு.ர்.

கானல்வரியில் கோவலன் காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும் மாதவி தன் மனம் மகிழ: வாசித்தபோதும், பெண்ணிற் பெருந்தக்கதாகிய கற்பினையே பாராட்டிச் சிறப்பித்துப் பாடினன்:

திங்கள் மாலை வெண் குடையான் சென்னிசெங்கோலது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணுய் மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி

கண்ணகி கணவன் பிரிந்திருந்த வேளையில் ஒரு தீக்களுக் காண்கின்றாள். அதனைத் தன் தோழி தேவந்திக்கு எடுத்து மொழிகிருள். அதுகேட்ட தேவந்தி, காவிரி கடலொடு கலக்குமிடத்தில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டத் துறை மூழ்கிக் காமவேள் கோட்டத்தை வணங்கினல் கணவருடன் வாழும் நற்பேறு பெறுவள் என்கிருள். அதுகேட்ட கண்ணகி -பீடன்று’ என்று சொல்லி மறுத்தாள்,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை