பக்கம்:உருவும் திருவும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உருவும் திருவும்

ஆயினும் மன்பதை கோவலனைக் கள்வன் என்று கூறுகின்றது. குற்றமற்றவன் தன் கணவன் என்று உலகிற்கு மெய்ப்பிக்க வேண்டிய கடப்பாடு அவளுக்கு வந்துற்றது. எனவே, காய் கதிர்ச் செல்வனே நோக்கிக் கள்வனே என் கணவன் எனக் கேட்டாள். கதிர்க்கடவுள், உன் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வனென்று கூறிய இவ்வூர் எரியுண்ணும் என்று கூறுகிருன் கதிரோன் கூறியதைக் கேட்ட கண்ணகி சீற்றம் மிகக் கொண்டாள். தன்பால் இருந்த மற்றாெரு சிலம்புடன் மதுரையின் விதிவழியே சென்று. அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, என் கணவனை முன்போலக் கண்டு அவன் கூறும் நல்லுரையினை நான் கேட்பேன்; அங்ஙனம் கேளேனயின் என்னை இகழ்க என்று சூளுரைத் தாள். கற்புடைப் பெண்டிரும், சான்றாேரும், தெய்வமும், முறை தவறிய பாண்டிய மன்னன் கூடலில் இல்லாமற் போய் விட்டனரோ என்று சொல்லி அழுதாள். கணவன் வெட்டுண்டு கிடந்த இடம் சென்று, அவன் பொன் துஞ்சு மார்பத்தினைப் பொருந்தத் தழுவினுள். அவன் உயிர்பெற்று எழுந்து, நின் நிறைமதி வாள்முகம் கன்றியது என்று கூறி, அவள் கண்ணிரைத் தன் கையால் துடைத்துவிட்டுச் சென்றான். கண்ணகியோ அப்போதும் சீற்றந் தணியாளாய்க் ‘காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; திவேந் தன் தனக்கண்டு திறங் கேட்பன் என்று அரசன் வாழும் அரண்மனை முற்றம் சேர்ந்தாள். வாயிற்காவலனைக் கண்டாள் :

வாயி லோயே வாயி லோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன்றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே

என்றாள். அவள் தோற்றத்தையும் செயலையும் வாயிற் காவலன் பின்வருமாறு அரசனிடம் கூறினன்