பக்கம்:உருவும் திருவும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உருவும் திருவும்

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீ யென்ன.

-சிலப்: வஞ்சினமாலை: 35-38.

இவ்வாறு சூளுரைத்து மதுரையை எரித்துப் பின்னர் மதுராதிபதித் தெய்வத்தின்வழிப் பழம்பிறப்பு உண்மைகளை

அறிந்தாள்.

சேரநாட்டின் குன்றத்தில் வாழும் மலைவாழ்நராம் வேட்டுவரும் வேட்டுவித்தியரும் கண்ணகியைத் தம் செங் குன்றில் கண்டு அவளை யாரென வினவுகின்றனர். அதற்குக் கண்ணகி கூறும் மறுமொழியிஞல் அவள் சீற்றம் தணிந்து, தன்னையே தான் நொந்துகொள்ளும் தன்மையில் உள்ளாள் என்பதைக் காண்கிருேம்.

மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனங்டுங்க முலையிழந்து வந்துகின்றீர் யாவிரோவென, முனியாதே, மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவங் துருத்தகாலைக் கணவனையங்கு இழந்துபோங்த கடுவினையேன் யானென்றாள்.

-சிலப்: குன்றக்குரவை : 3-6

இவ்வாறு கூறிய அளவில் கண்ணகி கணவனுடன் விமான மேறிச் சென்றாள். அது கண்ட மலைவாழ்நர் பெருவியப்புற்று, “இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லை’ என்று தேர்ந்து தெளிந்து விழாவெடுக்கின்றனர். பின்னர் மலைவளம் காணவந்த செங்குட்டுவனிடம் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறுகின்றனர். செங்குட்டுவன் மனைவி பெருங்கோப்பெண்டு கண்ணகியைப் பத்தினிக் கடவுள்’ எனப் பாராட்டினள்.

வடதிசை வேந்தரை வென்று வாகை சூடி, இமயமலையி லிருந்து பத்தினிப் படிவம் சமைப்பதற்குரிய கல்கொணர்ந்த