பக்கம்:உருவும் திருவும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்குடி மங்கையர் 63

செயல்கள் அனைத்தும் அவர்களின் அரும் பணிகளேயாம். தாய்க்குலமே வெற்றிக்கு வித்துான்றி வளர்த்தது என லாம்.

‘தொட்டிலே ஆட்டுங் கையே தொல்லுலகை யாளுங் கை’ என்ற முதுமொழி நம் நாட்டில் நிலவி வருகிறது. தமிழரின் வீரம் தலைசிறந்தது. அவர்கள் விழுப்புண் படாத நாட்களை வாழ்க்கையில் வழுக்கிய நாட்களாகவே கருதினர். மார்பிலே வேல்தாங்கிப் போரில் மடிவதை அவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். முதுகில் புண்படுவதை மானம் இழந்த ஒரு செயலாகக் கருதினர். இதனைத்தான் நம் தமிழ்மறை,

மயிர்ப்ேபின் வாழாக் கவரிமா அன்னர் உயிர்நீப்பர் மானம் வரின்

என்று விளம்புகிறது. இதனையே இனியவை நாற்பது, மானம் கெடவரின் வாழாமை முன்னினிதே’ என்கிறது. எக்காரணம் பற்றியேனும் மானம் கெட வந்தவிடத்து மன்னர் பலரும் வடக் கிருந்திருக்கின்றனர். வடக்கிருப்பதாவது, ஆற்றிடைக் குறை போலும் தூயதொரு தனியிடத்தை நண்ணி, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன், வடக்கு நோக்கி நோன்பு இயற்றி உயிர் விடுதலாம். இதனை நாம் கோப்பெருஞ் சோழனின் வீர வரலாற்றிலே காணலாம். சோழன் செங் கணனின் சிறைக்கோட்டத்தில் மானம்வர உயிர்துறந்து மானத்திற்கு வெற்றி நல்கிய சேரன் கணக்காவிரும் பொறை யின் வாழ்க்கைப் பொன்னேட்டிலே பரக்கக் காணலாம். இவ்வாறு உயிரைத் துச்சமென நினைந்து மானத்தைப் பெரி தாக மதித்த மாண்பினை மக்களுக்கு ஊட்டியவர்கள் இந்த மறக்குல மங்கையர்களேதான்.

சங்க இலக்கிய நூல்களிலே வீரச்சுவை விரவிவருவதைக் காணலாம். ஒன்பது சுவையினுள்ளும் காதலே அடுத்து வீரச் சுவையே விரவி வருகிறது. சீர் மல்கிய தமிழகத்தில் வீரம்