பக்கம்:உருவும் திருவும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்குடி மங்கையர் 65

பாம் புலவராகவே காணப்படுகின்றார். இவர் பெயர் காவற்

பெண்டு ஆகும். இவர் எழுதிய பாடல் பின் வருமாறு:

சிற்றில் கற்றுாண் பற்றி நின்மகன் யாண்டுள ைேவென வினவுதி; என்மகன் யாண்டுள யிைனும் அறியேன்: ஒரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிருே இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. -புறம் : 68.

இந்தச் செஞ்சொல் வல்ல காட்சிச் சித்திரத்தின் பொருள்:-"சின்ன இல்லத்திலே அழகிய வேலைப்பாட்டோடு அமைந்திருக்கும் தூணைப் பிடித்துகொண்டு உன்னுடைய அருமை மகன் எங்கிருக்கிருன் என்று என்னை உசாவுகின்றாய்; என்னுடைய மகன் எங்குச் சென்று இருப்பனே? யானவன் இருப்பிடத்தை அறிகிலேன். புலி உறைந்துவிட்டுப்போன மலைக்குகைபோல அவனை அருமையோடு பெற்றெடுத்த வயிறு இதோ: அவன் அடுகளத்திலே அமர்புரியத் தோன்று வான்; அங்குச் சென்று அவனை நீ காண்பாயாக’ என்பது. இதனுல் இப் பாட்டைப் பாடியவர் ஒர் மறக்குல மங்கை என்பதும், போரில் புலிபோல் பொருதும் போர்மறவனை மகளுகப் பெற்றிருந்தார் என்பதும், அத்தகைய வீரமகன் போர்க்களம் போந்தபின், புலி தங்கிப்போன மலைக்குகை போல் தாம் பெற்ற வயிற்றைக் கருதினரென்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியாகத் துலங்கும். இதனைப் பாடிய காவற் பெண்டின் மனநிலை அறிந்து இன்புறற்பாலது. வீர மக்களைப் பெற்றுப் பேணுவதில் பழிந்தமிழகப் பெண்டிர் பெற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும்தாம் என்னே!

ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்பாற் புலவர். ஒரு பாட்டில், ஒரு தாய் தன் மகனைப் போருக்கனுப்பும் மாட்சியைப் புலப்படுத்துகின்றார். “ஒரு தாய் முன்னர்

உ.உ Զ.-5