பக்கம்:உருவும் திருவும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உருவும் திருவும்

லனை மனம் வெறுத்து எதிர்ப் பாட்டுப் பாடும்படி தூண்டி விட்டது.

“ஆங்குக் கானல் வரிப் பாடல் கேட்ட மானெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன் தன்னிலை மயங்கின னெனக் கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ் வாங்கித் தானுமோர் குறிப்பினள் போற் கானல்வரிப் பாடற் பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மன மகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்கு மன்’ என்று கூறுகிறது. சிலம்பு.

மாதவி பாடிய கானல்வரிப் பாட்டினைக் கோவலன் கேட்டு,

கானல்வரி யான்பாடத் தானென் றின்மேன் மனம்வைத்து மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள் பாடிளுளென யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவங் துருத்த தாகலின்

மாதவியின்றியே கோவலன் நீங்கினன். அதுவே அவர்களு டைய இறுதிச் சந்திப்பாயிற்று. யாழிசைமேல் ஊழ் வினை வந்தது என இயம்புகின்றார் இளங்கோவடிகள்.

அடுத்துக் கோவலனும் கண்ணகியும் மதுரைமாநகர் நோக்கிப் புறப்பட்டதைக் களுத்திற முரைந்த காதையில்,

வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனசுடர் கால்சீயா முன்

என்கிரு.ர்.

இதனால், விதியே அவர்களை மதுரைக்குப் பயணம் கூட்டி யது என அறிய வருகிருேம்.

ஆராயாமல் பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்று அவன் கைச்சிலம்பினைக் கொண்டு வரும்படி காவ லரைப் பணிக்கின்றன். இதனை ஆசிரியர்,