பக்கம்:உருவும் திருவும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 77

முக்காலமும் உணரவல்ல ஞானமும் தவமும் படைத்த வசிட்ட முனிவர் சுமந்திரன்வழி முடிசூட்டு விழாத் தடைப் பட்டுப் போனதைக் கேள்வியுற்றார். அவரே, “விதியை வென்றவர் இவ்வுலகிலேயே யாரும் இல்லை’ என்று கூறுகிரு.ர்.

“வென்றவர் உளரோ மேலை விதியினை யென்று தசரதன் அரண்மனைக்குச் சுமந்திரன் சூழச் சென்றார்.

மேலும்,

குடைகிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒருர் கண்ணினும் கண்ணுவர்

என்பதும்,

அறுசுவை உண்டி அமர்ந்துஇல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கிஉண் டாரும் வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்

என்பதும் விதியின் விளையாட்டால் அல்லவா?

பாரதத்தில் பதின்மூன்றாம் நாள் போர், வில்விசயனம் அருச்சுனனின் அருந்தவப் புதல்வன் வீர அபிமன்யு விளைத்த வீரப் போர்க்கு ஆற்றாமல் துரோணர், கன்னன், சகுனி, அசுவத்தாமன், கிருபன் முதலிய மாவீரர்கள் தோற்றுப் பின் வாங்கினர். வணங்காமுடியோன் துரியன் மைந்தன் இலக் கண குமாரன் அபிமன்யு எய்த அம்பால் அடிப்பட்டு விழுந்து மாண்டான். ஆற்றாமை மேலிட அழுது அரற்றிய துரியனின் அவல ஒலத்தைக் கேட்ட செயத்திரதன் வீரப்போரை விடுத்துச் சூதுப் போர் நிகழ்த்திச் சூழ்ச்சியால் அபிமன்யுவைக் கொன்றான். தாழ்ந்தோன் கையில் உயர்ந்த வீரமைந்தன் மாண்டான். இவ்வுலகில் இவ்வாறு வந்து தாக்கும் விதியின் கொடுமையினை வெல்ல வல்லவர் எவரேனும் உண்டோ?” என உருக்கமாகப் பாடல் செய்துள்ளார் கவிச் சக்கரவர்த்தி