பக்கம்:உருவும் திருவும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சேக்கிழார் தந்த செல்வம்

தொண்டர்தம் பெருமையினைப் பரக்கப் பேசும் நூல் பெரிய புராணமாகும். இந் நூலின் ஆசிரியர் சேக்கிழார் பெருமான் ஆவர்; இவர் புலியூர்க் கோட்டத்தைச் சார்ந்த குன்றத்துாரினர். சேக்கிழார் என்ற தம் குடிப்பெயராலேயே வழங்கப்பெற்ற இவர்தம் இயற்பெயர் இராமதேவர் எனக் கல்வெட்டுகொண்டு அறிகிருேம். இரண்டாம் குலோத்துங்க சோழன் அருண்மொழித்தேவர் என்ற பெயரால் வழங்கப் பெற்ற இவரைத் தன் முதலமைச்சராக்கி, இவருக்கு உத்தம சோழப் பல்லவன்’ என்ற பட்டத்தையும் வழங்கினன். இவர் தம் தம்பியார் பாலருவாயர் சோழவேந்தனின் படைத்தலை வராக விளங்கினர்.

முதன்மைபெறும் முதலமைச்சர் பணியினை வள்ளுவர் வகுத்த அமைச்சு என்னும் அதிகாரத்திற் கூறிய வண்ணம் செவ்வனே ஆற்றிவந்த சேக்கிழார் பெருமான், சீவகசிந்தா மணி என்னும் சமண சமயக் காவியத்தில் அளவு கடந்து ஈடுபட்டிருந்த அரசனுக்குச் சிவனடியார்களின் பெருமையினை மன்னன் மனங்கொள்ளுமாறு எடுத்து மொழிந்தார்.

கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்

என்றபடி சேக்கிழார் பெருமான் கூறிய மொழி கொண்டே

குலோத்துங்கன் அச் சீர்த்தி பெறு சிவனடியார்தம்

வரலாற்றை அறிய ஆவல் கொண்டான். சேக்கிழார் பெரு

மானும் அவன்தன் வேண்டுகோளை ஏற்றுத் தில்லைப்பதி

உ. தி.-6