பக்கம்:உருவும் திருவும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 உருவும் திருவும்

சார்ந்து பொன்னம்பலத்தில் நடமிடும் தில்லைக் கூத்தனர் அம்பலவாணனின் அடியினைகளை இறைஞ்சிப் பரவ. ‘உலகெலாம்: எனுமொலி எழுந்தது. சேக்கிழாரும் ‘உலகெலாம் என்ற சொல்லையே முதலாக வைத்து, அடிய வர்தம் பெருமையினை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றியருளினர். தொண்டர்களின் பெருமை யினை இந் நூல் சிறக்கப் பேசுவதால், திருத்தொண்டர் புராணம் என்ற பெயர் அமைந்தது. சைவ உலகின் பெரிய நூலான காரணத்தால் பெரிய புராணம் எனப் பின்வந்த வர்கள் இந் நூலினை வழங்குவராயினர்.

இந் நூல் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் இறுதியானதாகும்; பதின்மூன்று சருக்கங்களும், 4253 பாடல் களும் கொண்டது. இந் நூலினைச் சேக்கிழார் தில்லையில் எழுதி முடித்ததும், அரசன் தில்லையைச் சார்ந்து பேரவை கூட்டி ஓராண்டு முழுவதும் இந் நூலினை ஒதக்கேட்டு அளப் பிலா உவகையுற்றனன். முடிவில் சேக்கிழார் பெருமானையும் அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தினையும் யானை மீதேற்றித் தானும் பின்னிருந்து கவரிவீசி நகர்வலம் வந்து வணங்கிச் சேக்கிழாருக்குத் தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தான்.

சேக்கிழார் தூய இனிய நெஞ்சினர்; எளிமையும் இனிமையும் மிளிரப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். அவர் நடை மிகவும் செம்பாகமானது: அரிய சொற்கள் விரவாமல் எளிய சொற்களே நிறைந்து ஆற்றாெழுக்குப் போலச் சொல்லும் பொருளும் ஒத்துச்செல்லும் தன்மை வாய்ந்தது. மேலும் தெய்வநலங் கெழுமிய பாடல்களின் தொகுப்பே பெரிய புராணம் எனலாம். தண்டமிழின் தனிப் பெருமை யினைச் சேக்கிழார், ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்’ என்று குறிப்பிடுவர். இவரைத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள், தாம் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில், ‘பக்திச் சுவை நனி சொட்டச்