பக்கம்:உருவும் திருவும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 83

சொட்டப் பாடிய கவி வலவ! என்று பாராட்டிள்ளார். இக்கூற்று முற்றிலும் பொருத்தமானதாகும்.

ஆங்கில மொழியினை வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் மொழியினைச் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்க மொழியினை இசையின் மொழி என்றும், ஜெர்மன் மொழியினைத் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு மொழியினைத் துரதின் மொழி என்றும், இத்தாலிய மொழியினைக் காதலின் மொழி என்றும் கூறுவது போலவே, தமிழை இரக்கத்தின் மொழி-பக்தியின் மொழி என்று அறிஞர் உரைப்பர். தமிழ் பக்தியின் மொழி என்ற இக் கூற்றினைப் பெரிய புராணம் படிப்பவர் ஒருதலையாக ஒப்புக்கொள்வர் என்பது திண்ணம்.

பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றினை விளங்கக் கூறுகின்றது. இந் நூலிற்கு மூல நூல் களாக விளங்குவன சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய திருத் தொண்டத் தொகையும், “தமிழ் வியாசர்” எனப் பெருமை யுடன் அழைக்கப்பெறும் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியுமாகும். பெரிய புராணத்தைத் தனித்தனி அடியவர்கள் வரலாறு கூறும் ஒரு கோவை என்று கருதாமல், நூல் முழுமையினையும் எடுத்துக்கொண்டு பார்த் தால், சுந்தரமூர்த்தி நாயனர்தம் வரலாற்றினைக் கிளத்திக் கூறும் ஒரு காப்பியம் எனத் தெரிய வரும். சுந்தரமூர்த்தி நாயனரின் முந்திய வரலாற்றைத் திருமலைச் சருக்கம் கூறு கின்றது. நாட்டுச் சிறப்பாகச் சோழநாடும், நகரச் சிறப் பாகத் திருவாரூரும் புனைந்து கூறப்பட்டுள்ளன. இவையெல் லாம் பெருங்காப்பியத்தின் இலக்கணத்திற்கு அரண் செய் வனவாம். மேலும், சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்தில், சைவ முதற் திருத்தொண்டர் தம்பிரான் தோழனர் தம்பி’ என வரும் தொடரால் திருத்தொண்டர்