பக்கம்:உருவும் திருவும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 85

கின்றார். அதுபொழுது உழவாரம் நுழைந்த இடமெங்கும் பொன்னும் நவமணியும் பொலிந்திலங்க இறைவன் அருள் செய்து, அடியவர் மனநிலையினைச் சோதிக்க எண்ணுகின்றார். ஆனல், நாவுக்கரசரோவெனில் செம்பொன்னினையும் நவ மணியினையும் உருள்பருக்கைக் கல்லுடன் ஒக்க நோக்கி உழவாரத்தினில் ஏந்திப் பூங்கமல வாவியினிற் புக எறிந்தார். இந் நிலையினைச் சேக்கிழார்,

புல்லோடும் கல்லோடும் பொன்ைேடும் மணியோடும் சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்

-பெரிய, திருநாவுக்கரசர் புராணம்: 418.

என்று கூறியுள்ளார்.

தேவாரத் திருப்பதிகங்களை நன்கு ஒதி உணர்ந்து உளத்திற் கொண்டவர் சேக்கிழார் என்பது, அவர் நூலின் பலவிடங்களிலும் தேவாரத் திருப்பதிகக் கருத்துக்களையும் தொடர்களையும் கையாண்டுள்ளமை கொண்டு தெளியலாம். அமண் சமயத்தில் தொடர்புற்றுத் தருமசேனர் என்ற தலைமைப் பட்டத்தினையும் பெற்றுப் பின் இறையருளால் சூலைநோய்க்கு ஆளாகித் துன்புற்ற நாவுக்கரசர் தம் தமக்கை திலகவதியார் சொற்கேட்டுப் பழம்சமயமாம் சைவசமயம் புகுகின்றார். இது கேட்ட அமண் சமயத் தலைவர்கள் அவரைக் காஞ்சி நகர்க்கு வரவழைத்து மன்னன் ஆணை பெற்று நீற்றறையில் இடுகின்றனர். அதுபொழுது நாவுக்கரசர் பின் வரும் பாடலைப் பாடுகின்றார்: ■

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி கீழலே,