பக்கம்:உருவும் திருவும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 == உருவும் திருவும்

உன்மேல் காதலால் உரைத்தேன்’ என்று உலகெல்லாம் கலக்கி வென்றான் இயம்பினன். இதனைக் கேட்ட இலங்கை வேந்தன் எயிறு இளநிலவு தோன்றப் புயங்கள் குலுங்க நக்குத் தன் தனயனிடம் பின் வருமாறு கூறும் கூற்றில் நாடக நயம் கான

ΕΙ) ΠΓΙΕΣ

முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் கின்றாேர் எல்லாம் வென்று அவர்ப்பெயர்வர் என்றும் உன்னைநீ அவரை வென்று தருதி.என்று உணர்ந்தும் அன்றால் என்னையே நோக்கி யான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்.

-கம்ப. யுத்த. இந்திரசித்து வதைப் படலம்: 8.

பிறர் எனக்கு வெற்றி கொடுப்பர் என்று நான் இப்பகை யிஜனத் தேடிக் கொள்ளவில்லை. என்னை நோக்கியே இப் பெரும் பகையைத் தேடிக்கொண்டேன்’ என்கிருன் இராவணன். எத்துணை நெஞ்சுரம் இவனுக்கு இணையற்ற விரளுயிற்றே இராவணன்! வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், தாரணி மெளலிபத்தும் உடைய வனன்றாே இராவணன்! ஆயினும் அவனும், முதல்நாட் போரில் இராமபிரானிடம் தோற்று, கோசல நாடுடைய வள்ளலால் இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா எனப் பட்டான். இலங்கையை நோக்கி இராவணன் சங்கரன் கொடுத்த வாளினையும் வீரத்தினையும் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு வெறுங்கையனுய்த் தி ரு ம் பு: கி ன் ரு ன். அதுபோது எந்தத் திசையினையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை; வளநகரையும் நோக்கவில்லை; எதிர்ப்பட்டோரையும் அவன் கண்கள் சந்திக்கவில்லை; கடலனைய .ே ச னை ைய க் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அரண்மனையில் வாழும் மகளிர் எல்லாம் தன்னை நோக்கத் தான்மட்டும் பூமி என்கிற பெண்ணையே நோக்கித் தலைகுனிந்து சென்றான் என்ற கம்பன் கூற்றில்தான், எத்துணை அழகு மிளிர் கின்றது!