பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உரைநடைக் கோவை றேனும் வாயக்கப்பெறாத யான், இவர்தம் நிரலில்வைத் தெண்ணப்படும் பேறு பெற்றமைக்குக் காரணம், அந் நிரலில் அன்பரும் அமைகவென இச் சங்கத்தார் கரு தியதென்றே எண்ணுகின்றேன். இச்சங்கத்தார் என்னை உறுப்பினனாகக் கொண்டு சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆண்டு விழாக்களில் அழைத்து இம் மன்றத்தில் விரிவுரை நடத்துவித்துச் சிறப்பித்து வந்தனர். அம் மட்டில் அமையாது. இற்றைஞான்று தலைமை யளித்துஞ் சிறப்பிக்க மேற் கொண்ட அன்புடைமையை என்னென்பேன்! இங் நன்றி எஞ்ஞான்றும் மறப்பேனல்லேன். 1. தாய்மொழிக் கல்வி அன்பர்களே! ஒருமைக்கட் பயிற்சியால் எழுமைக்கண்ணும் தொடரும் இயல்பின்தாகிய கல்வியே மக்களை மக்கட் டன்மை யுடையராக்கும் என்பது பெரியார் துணிபு. எந் நிலத்தில் எக் குடிக்கட் பிறந்தாராயினும் கல்வி யுடையாரையே உலகம் போற்றும் என்பது கண் கூடாகி அறியப்பட்டதொன்று. இத்தகைய விழுப் பஞ் சான்ற கல்வியை, எந்நிலத்தில் எம்மொழி வழங் கப்படுகின்றதோ அந்நிலத்தில் வாழும் மக்கள் அம் மொழி மூலமாகவே முதற்கட் பயிலவேண்டும். அதுவே அந் நிலத்து மக்கட்குத் தாய்மொழியாகும். ஒரு குழந்தை பிறந்து மொழி பயிலுங்கால் அதன் தாயால் முதற்கண் பயிற்றப்படும் மொழி யாது ? அதுவே தாய்மொழி என்று கோடல் பொருந்தும்.