சங்க காலத்து அங்கதம் ஆம் இப்பகுதியால், தலைமகன் பரத்தையர்பாலொழு கிய தீயொழுக்கத்தைக் கடிந்து அவன் திருந்தியொழுக வேண்டுமென்னுங் கருத்தினளாய்த் தலைவி குறிப்பிற் கூறிய வசைமொழி புலப்படுதலின் இதுவும் பழி கரப்பு அங்கத்தின்பாற் படுவதாகும். ஐங்குறுநூறு என்னும் சங்கச் செய்யுளில் உள் ளுறையாகக் கூறப்பட்ட பாடற் பகுதிகளில், இச்சுடு சொல்லாகிய அங்கதம் பல இடத்தும் நகைக் குறிப்புத் தோன்றப் புலப்படுக்கப்பட்டுள்ளது. பரத்தைமை யாகிய புறத்தொழுக்கத்திலே ஒழுகிவந்த தலைமகனை கோக்கி தோழி தன் விருப்பம் இன்னதெனக் கூறு மூகமாக, "பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு பழன மாகற்க எனவேட் டேமே" 93 எனக் கூறினள். இதன்கண், பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரன் என்றது, ஈன்று பயன்படாப் பொது மகளிரையும் குழந்தைபெற்றுப் பயன்படும் குலமக ளிரையும் ஒப்பாக நினைப்பவன் தலைவன் என்று அவ னுடைய குறை, வருணனைக் குறிப்பில் புலப்படுக்கப் பட்டுள்ளது. இன்னும், கரும்புநடு பாத்தியுட் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்பு லூர! என்று தலைவனை அழைக்கு முகமாகப், 'பரத் உரிய இலலில் யானிருந்து தையர் தங்குதற்கு விருந்தினர் முதலியோரை உபசரிக்கலானேன்' என்று தலைவி தலைவனது தீய வொழுக்கத்தைக் கடிந்து அவன் நெஞ்சுற உணர்த்தியது புலனாம். இங்கே
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
