பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்து அங்கதம் வொழுக்கத்தைத் தலைவி கரந்த மொழியிற் பெற வைத்து அறிந்து இன்புறத்தக்கது. 95% இனிப் பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்றாகிய சீவகசிந்தாமணியில், சச்சந்தன் என்னும் அரசன், விசயை என்னும் தன் மனைவியின் காதல் வயப்பட்டுக் கட்டியங்காரன் என்னும் அமைச்சன்பால் அரசியலை விட்டு இடையறாத போக நுகர்ச்சியில் தலைப்பட்டானாக, அந்நிலையில் அத்தீய அமைச்சன் அரசனைத் தொலைத்து நாடாட்சியைத் தன்னதாக்க முயன்று தன் அமைச்சர் பலரோடு சூழ்ந்து ஆலோசிக்கும் மளவில் தருமதத்தன் என்னும் நல்லமைச்சன், இது தகாத காரியம் என்று பற்பல நீதிகளை எடுத்துரைக்க, அவன் உரைகளை மறுத்து மதனன் என்பான் கட்டியங்காரன் கருத்துக்கு. ஒத்த முறையிற் கூறியதாகவுள்ள செய்தி பின்வரும். செய்யுளிற் காணப்படும்: தோளினால் வலிய ராகித் தொக்கவர் தலைகள் பாற வாளினாற் பேச லல்லால் வாயினாற் பேசல் தேற்றேன். காளமே கங்கள் சொல்லிக் கருணையார் குழைக்குங்கைகள் வாளமர் நீந்தும் போழ்து வழுவழுத் தொழியு மென்றான். இதன்கண் பின் இரண்டடிகளும் இங்கே நினைக்கத் தக்கன. 'போர்ச் செயலைப் பற்றிய வீரவுரைகளைக் காளமேகம் போல முழங்கக் கூறி அச் செயலில் தலைப்பட நேர்ந்தபொழுது அஞ்சுவார்க்குப் பொரிக் கறிகளோடு சோற்றைத் திரட்டும் அவர் கைகள் அப் போர்க் கடலை நீந்துவதற்கு இயலாது வழுவழுத் தொழியும் போலும்' என்று போர் குறித்துப் பின் வாங்குவோரைச் சுடு சொல்லாற் பழித்துக் கூறியதும் அங்கதத்தின்பாற் படுவதாகும்.