பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. காதற் கடிதங்கள்* காமம் காதல் என்பது ஆடவர் மகளிர் இருவரும் உலக வாழ்க்கையில் அறநெறி பிறழாதொழுகி இன்ப நுதர்தற்குரிய சிறந்த குணமாகும். காதல் என்னும் இரண்டனுள், காமம் இழிந்த நிலையில் நிகழ்வ தென்பதும், காதல் உயர்ந்த நிலையில் நிகழ்ந்து தன் வயப்பட்டாரை எத்துணை இடையூறு நேரினும் பிறழவிடாது பிணித்து இன்பத்தினும் துன்பத்தினும் பகிர்ந்தனுபவிக்கச் செய்து நெடிது நிலைத்திருப்ப தென்பதும் அறிஞர் கண்ட உண்மைகளாம். ஆடவர் மகளிர் கூடி நுகரும் இன்பத்தின் இயல்பை விளக்க நினைத்த பெரியார், "எஞ்ஞான்றும் காதலிருவர் கருத் தொருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்று கூறினர். காமம் பற்றி ஆடவர் மகளிரை முறையே காமுகன் காமுகி என்று கூறுதலினும் காதல்பற்றிக் காதலன் காதலி என்று கூறுதல் அறநிலைக்கொத்த சிறந்த வழக்கென்பதையுங் காணலாம். தமிழ் மொழி யிற் சங்க இலக்கியங்களாக உள்ள அகநானூறு குறுந் தொகை முதலிய அகப்பொருட் பகுதியை நுதலிய நூல்களெல்லாம் இக்காத லியல்பை விளக்க எழுந் திருச்சிராப்பள்ளி வானொலியிற் பேசியது.