பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் கடிதங்கள் தனவாம். அறம் பொருள் இன்பங்களை அகம் புறம் என வகுத்த தமிழ் இலக்கண நூலாசிரியர்கள், முன் னைய இரண்டையும் புறமெனவும் பின்னையதாகிய இன்ப நிலையை அகமெனவுங் கொண்டு பாகுபாடு செய் தனர். அகப்பொருளிற் காதலையும் புறப்பொருளில் வீரத்தையுமே சிறந்தனவாக எடுத்து விளக்கியதனா லும் இக் காதலின் பெருமையை உணரலாம் ஆடவர் மகளிர் இருவரும் முதலில் வாழ்க்கை யின்பத்தில் தலைப்படுத்தற்கு ஒருவர்பாலொருவர் மேற்கொள்ளுங் காதலே சிறந்த கருவியாம். முதலில் காதல் முகிழ்த் தற்கு ஏதுக்கள், உடல் வனப்பு, அன்பு, அறிவு முதலிய. சிறந்த குணங்கள் என்னும் இவை முதலியனவாம். சில விடங்களிற் காதலின் தோற்றத்திற்குக் காரணங் காண்டல் அரிதாகவும் முடியும். இக்காதல் வயப்பட் டார் ஒன்று கூடுவதற்கு நீங்காத தடை நேரின், அது காரணமாகச் சாதலும் அவர் பக்கல் இனிதாகும் என் பது சரித்திரங்களாற் கண்டதொன்று. 97 ஆடவர் மகளிர் ஒருவரை யொருவர் காதலித்துத் தம்முட் கூட்டம் நிகழ்த்தற்கு முன்னரும், கூட்டம் நிகழ்ந்து எக் காரணத்தாலாவது பிரிவு நேர்ந்த பின்ன ரும் இக் காதற் சிறப்பு அவர்கள் முகமாக நன்கு புலப் படுவதாகும். இக காதற் குறிப்பு, உடல் வேறு உயிர் ஒன்றெனக் கருதத்தகும் தொடர்புடையார்க்கன்றி வெளிப்படுத்து நிலையில் உள்ளதன்று. ஆடவர், தம் இன்னுயிரனைய பாங்கர்பாலும், மகளிர், கண்போற் சிறந்த உயிர்த்தோழியரிடத்துமன்றி வெளிப்படுத்துவா ரல்லர். இதனியல்பைச் சீவக சிந்தாமணி நூலாசிரி யர், ' சென்றே படினும் சிறந்தார்க்கு உரைக்கலாவ 7