102 உரைநடைக் கோவை மாக ஒரு காதற் கடிதம் எழுதலாயினாள். இது காதலர் கூட்டம் நிகழ்ந்தபின் எழுதப்படடதாகும். அக் கடிதங்க ளிரண்டும் அவ்வப் பாத்திரங்களுக் கேற்ற முறையில் அமைந்துள்ளன. அக் கடிதப் பாசுரங்களுள் சகுந்தலை கடிதம வருமாறு. அதன் மொழி பெயர்ப் பாவது, நின்னுடைய உள்ள நிலையறியேன் நின்பாலே மன்னனுடைய வேட்கை மலிவுற்ற - என்னுறுப்பைக் காமன் இரவும் பகலும் கனற்றுகின்றான் ஏமவரு ளில்லா யிவன்" A என்பதாம். 'அருளில்லாத அரசே ! நின்பாற் கொண்ட வேட்கை மிக்க உடலுறுப்புக்களை மன்மதன் இரவும் பகலும் எரிக்கின்றான்; இந்நிலையில் நினது உள்ளத் தின் நிலை இன்னதென்று அறிந்திலேன்' என்பது இப் பாடலின் கருதது. இனி மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம் வருமாறு: மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனும் செவ்விய னல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தந்துணைமறப்பினும் நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்றிஃ தறிந்தீமின்' என்பதாம். 'உலகத்திலுள்ள உயிர்களை யெல்லாம் தாம் மகிழுந் துணையோடு புணர்விக்கும் இனிய இளவேனிலாகிய வசந்தனென்பான் இளவரசனாவன். ஆதலால், ஒழுங்குபடச் செய்யான். அன்றி, அந்திப் பொழுதின்கண்ணே அரும்புகின்ற விரக விதனத்தின்
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
