பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் கடிதங்கள் -- ww 108 மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வனும், பிறப்பினுங் கோட்டமுடையன் ஆதலால்,கூடினோர் இடையே சிறிது தாழ்ப்பினும் பிரிந்தோர் மறப்பினும் மணமிக்க பூவாளிகளால், இன்ப நுகரும் அவ்வுயிரைக் கொண்டொழிதல் அவனுக்குப் புதியதொரு காரிய மன்று. அதனை அறியுங்கள்' என்பது இப் பாசுரப் பகுதியின் கருத்தாம். சகுந்தலை எழுதிய கடிதம் கிளியின் வயிறுபோன்ற பசுமை மிக்க மெல்லிய தாமரையிலை யாகும். அதன் கண், அவள் தீன் கைந் நகங்களையே எழுதுகோலாகக் கொண்டு எழுத்துக்களைப் பதித்தனள் என்பர். தாமரை யின் மெல்லிய இலைகளால் அவள் வெம்மை தணிய அப்பொழுது தோழியர் விசிறிக் கொண்டிருந்தன ராதலின், அவள் இருந்த இடத்தில் கிடைத்த தாமரை யிலையே எழுதுதற்குரிய கடிதமாயிற்று. எழுதுகோல் தேடுதற்கு அவகாசம் இன்மையாற் கைந் நகங்களாற் பதிக்கலாயினாள். மாதவி கடிதமாகக் கொண்டது, முதிர்ந்த அழகிய தாழையினது வெள்ளிய இதழாகும். மாதவி காவிரிப் பூம்பட்டினத்து உள்ளா ளாதலானும், அப்பட்டினம் கடற்கரைக் கண்ணதாதலானும், நெய்தல் நிலத்துக் கருப் பொருளாகிய தாழை மடலைக் கடிதமாகக் கொண்டாள். அம்மடல், நல்ல நிறமும் பளபளப்பும் நறுமணமும் காய்ந்துலர்ந்தாலும் கெடாத வன்மை யும் உடையது. எழுதுகோல் பித்திகைக் கொழுமுகை ஆணி என்றதனால், முனையாகும். மை பூவரும்பின் குழம்பாகும் நறுமணமுள்ள செம்பஞ்சின்