104 உரைநடைக் கோவை ஆகவே, வெண்ணிறமான தாழையிதழிற் செந் நிறமான குழம்பில் பூவரும்பின் முனை கொண்டு எழுதப்பட்ட தென்பதும், இக்கருவிகள் காதற் குறிப்பிற் கேற்றபடி இன்பம் விளைவிக்கும் பொருள்க களாக அமைந்தன என்பதும் புலனாம். எழுதிய பெண் மக்கள் இருவருள், சகுந்தலை அரச குலத்தவனால் கைப்பற்றத் தக்கவளாயினும், அந்தணர் ஆச்சிரமத்தில் வளர்ந்தவளாவாள். காதற் புதியவளுமாவாள். பயனுக்கு அநுபவ ஆதலின் அவள், மில்லாப் மன்மதன் பகலும் இரவும் சுடுகின்றான்; நின் கருத் தறிந்திலேன் என வெளிப்படத் கருத்தைக் குறிப்பாற் தீட்டினாள். தன் புலப்படுத்தினால் தனக்குப் புதியவனாகிய வேந்தன் பொருள் வேறுகொண்டு புறக் கணிக்கவுங் கூடும் என்னும் ஐயத்தால், விளக்கமாக எழுதினா ளென்று கொள்ளலாம். ஒருவரை யொருவர் மன நிலை அறியாத நிலையில் எழுதப்படுங் கடிதத்தில், குறிப்புமொழி பொருள் விளக்கஞ் செய்யாதாகலிற் யொழியவுங் கூடும் தெளிவாகப் பயனின்றி ஆதலானும், பிறரறியாமற் காதலிக்கப்பட்டா னொரு வனே பார்க்கக்கூடுமென்னுந் துணிவானும் இங்ஙனம் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. முடிவாகத் தன் வேட்கையைப் புலப்படுத்தி இதற்குப் பரிகாரமாகச் செய்யவேண்டிய காரியத்தில் நின் கருத்து இன்ன தென்று அறிந்திலே னென்று சகுந்தலை எழுதியது பொருத்தமே. தாமரையிலைக் கடிதம் எழுதியதும், காதலனாகிய வேந்தன் தாழாது வெளிப்பட்டா னாதலால் மிகுவிரைவில் வாடத்தக்க அவ்இலையின் பயன் வீணாகவில்லை.
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
