108 உரைநடைக் கோவை உடையளாதலின் இங்ஙனம் எழுதினாள். இவளுடைய உயர்ந்த நிலையைக் காதலனாகிய கோவலன் பிரிவில் உலக வாழ்க்கையைத் துறந்து துறவுநிலை பூண்டத னாலே அறியலாம். இவளெழுதிய கடிதம், கட்டப் ULL மலர் மாலையினோடியைத்து வசந்த மாலை என்னும் மற்றொருத்தி வாயிலாக விடுக்கப்பட்டதாகும். அது, சேய்மைக்கட் பிரிந்திருந்த கோவலற்குச் சில நாழிகை கழித்துச் சேரத்தக்கதாகலின் தாமரையிலை போல் விரைவில் வாடும் இயல்பினதாக அன்றி நெடிது நிற்பதாகிய தாழை மடலாக அமைந்தது பொருத்தமே. சகுந்தலை, துஷ்யந்தனுடைய காட்சியில் ஈடுபட்டுக் காதலால் வெதும்பும்போது அவள் சிறுமி ஆதலால் தன் காதற் குறிப்பை எவ்வாறு காதலற்குப் புலப்படுத்துவதென் றறியாளாய்த் துன்புறும் நிலையில், பிரியம்வதை என்னும் உயிர்த்தோழி சகுந்தலையை நோக்கித் "தோழி, அவ் வேந்தற்கு ஒரு காதற் கடிதம் எழுதுக; அதனை ஒரு நறுமலர் மாலையில் மறைய வைத்துத் தேவப்பிரசாதம் என்று பெயரிட்டு அவ் வரசர் பெருமானிடம் சேர்த்துவிடுவேன்" என்றாள். அதனை மற்றொரு தோழியாகிய அநசூயை, "யானும் அப்படியே நினைக்கின்றேன்' என்று ஆமோதித் துப் பேசினாள். அதன்மேற் சகுந்தலை, நும் கட்டளை யில் மாறுபாடேது என்று உடன்பட்டுக் காதற் பாசுரத்தை ஆராய்ந்து எழுதினாள். இந்நிகழ்ச்சி யில், அவள் தகுதிகேற்பக் கவி கருதியது பாராட்டத் தக்கதே. இனி மாதவி தன் காதலனோடு அநுபவித் துப் பன்னாட் பழகியவளாதலாலும், தனக்கு ஒருவர் அறிவிக்க வேண்டுவது இல்லையாதலாலும், மடலவிழ் £
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
