பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 27 குறுந்தொகை என் தோறும் "நவில்தொறும் நூல்நயம் போலும் னும் முதுமொழிக்கிணங்க இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும். இத்தகைய பொருள்வளஞ் சான்ற சங்க இலக்கியங்கள் இடையே சில நூற்றாண்டுகளா கத் தமிழ் மக்களாற் பயிலப்படாமலிருந்தன. இப் பொழுது ஒரு சில ஆண்டுகளாக அத் துறையில் விழிப் புடையராயப் பயில முற்பட்டிருப்பது மகிழ்ச்சி தருவ தொன்று.இற்றைஞான்று ஆடவரும மகளிரும் சங்க இலக்கியங்களைப் படிக்கவும், அவற்றில் கூறப்படும் இயற்கை முதலிய பொருளழகுகளை உணர்ந்து இன் புறவும், பெருங் கழகங்களில் பலருந் தெளிய எடுத் துரைக்கவும் தகுதியுடையராய் முன்வருதல், தமிழராக் கம் புத்துருப்பெற்று வளர்தற்கேற்ற சான்றாகும். இந் நிகழ்ச்சியில் இச் சென்னை மாநகரம் முற்பட்டிருப்பது சிறப்பாக நினைக்கத்தக்கதொன்று. பத்துப்பாட்டு மாநாடு, கலித்தொகை மாநாடு, சங்க இலக்கிய மாநாடு என மூன்று பேரவைகள் இதற்கு முன் நடை பெற்றன. இன்னும் பல நடைபெறுவதற்குரிய முயற்சி கள் காணப்படுகின்றன. இன்று மாநாடு "குறுந்தொகை" என்னும் அரிய நூலைப்பற்றியதாகும். குறுந்தொகை என்பது சங்க இலக்கியங்களாகிய தொகை நூல்கள் எட்டனுள் ஒன்று. இது நல்ல குறுந்தொகை என்று பாராட்டப்பட்டுள்ளது. அகப் பொருள் நுதலிய தொகை நூல்களுள் அடியளவாற் பெற்ற பெயர் இதுவாகும். நாலடிச் சிற்றெல்லையை யும் எட்டடிப் பேரெல்லையையும் உடையது. அடியள வாற் குறுகியதன்றிப் பொருளளவாற் பெரியதென்றே கூறலாம். இதன்கண், மேற்கொண்ட அகத்துறை கூடிய