பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை மூவிரு முகனும் முறைநவின் றொழுகலும் மனங் கொள்ளுவார்க்கு அறுவகை இயைபு எவ்வாற்றாலும் அப்பெருமானுக்குப் பொருந்தியதென்று உயர்ந்த கருவிகள் கருத்துதல் இயல்பே. இதற்கேற்ப இக்கடவுள் வாழ்த்து ஆறடிகளால் ஆக்கப்பட்டிருப்பதும் ஈண்டு உணர்ந்து இன்புறத்தக்கது. இனி, முதலில் அப் பெருமானுடைய சிவந்த திருவடியே புனைந்துரைக்கப் படுகின்றது. கடவுளரைப் பாடுங்கால் அன்னார் திருவடி நினைவே கவிகளுக்கு முன்னிற்பதாகும். அதனாற் பெறும் பயன் நோக்கி அங்ஙனங் கூறல் மரபு. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் திருவடி யும், யாவர்க்கும் கீழாம் அடியார் தலையும் ஒன்று படுவதே வேண்டப்படுவதாகும். இது கருதியே இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய வீட்டு நிலைக்குத் தாடலைபோல் அடங்கி நிற்றல்" என்று சைவப் பெரியார் எடுத்துக் காட்டுவர். 'தாடலை என்னுந் தொடரில், தாள் என்பதனிறுதியும், தலை என்பதன் முதலும் ஒன்றுபட்டுத் "தாடலை' என்றாய வாறு போல, இறைவன் நிலையில் உயிர்நிலை தோய்ந்து இரண்டற்ற நிலையாதலே வீடு புலனாம். இங்ஙனம் திருவடியை முதற்கண் தொடங்குதலும், அத்திருவடிக்கட் பொருண் முடிபு கோடலும் ஆகிய மரபு குறுந்தொகைக்கண் அன்றி நற்றிணை, ஐங்குறு நூறு, அகநானூறு முதலியவற்றிலும் முறையே "மாநிலஞ் சேவடியாக" எனவும், 'ஒருவன் இருதாள் நிழற்கீழ்' எனவும், தாவில் தாள் நிழல் என்பது " 33 66 " 118 தவிர்ந்தன்றா லுலகே எனவுங் கூறிய முறையான் உணரலாம். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு 8