பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இம் மூன்றும் முறையே குறுமை, இடைநிகர்,நெடுமை ஆகிய அடியளவு பற்றித் தொகுக்கப்பட்டனவாம். இவற்றிற்கு முறையே பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகன், திருமால், சிவபிரான் இவர்களைப்பற்றிக் கடவுள் வாழ்த்துக் கூறியுள்ளார். இம் முறையில் ஆசிரியர் பிரமன் திருமால், சிவபிரான் இவர்களைப் பற்றிக் கருதியிருக்கலாம். பிரமனைக் கூறவேண்டிய பகுதியில் அப்பிரமனை மறைப்பொருள் வினவி அடக்கியருளிய ஆற்றல் முருகவேளுக்கு உள்ளதாலும், நிலக்கிழமை பற்றியும் இதற்கு முருகன் வாழ்த்துச் சிறந்ததென மேற்கொண்டார் போலும். இனி, நானிலத்து ஐந்திணை ஒழுக்கமும் இந் நூல் நுதலிய பொருளாதலின், அப்பொருளைக் கருக்கொண்டுள்ளது இப்பாடலென உணர்க. இங்ஙனம் நூல் நுதல் பொருளைத் தன்னகத்தடக்கி முதற்பாடல் புலப்படுக்குமாற்றைத் யாரில் "திருவளர் தாமரை திருக்கோவை என்னும் முதற் 66 செய்யுட்குப் பேராசிரியர் செய்த நல்லுரையானும் உணரலாம். இக்கடவுள் வாழ்த்துப் பாடலில் அக் கருப்பொருள் அமைந்த முறையைச் சற்று ஆராயத் தொடங்குவேன். தாமரை புரையுங் காமர் சேவடி என்புழி மருத நிலத்துக் கருப்பொருள் ஆகிய தாமரை யும், " பவழத் தன்ன மேனி" என்புழி நெய்தல் நிலத்துக் கருப்பொருள் ஆகிய பவழமும், குன்றி யேய்க்கும் உடுக்கை " என்புழி முல்லைக்கு உரியதாகக் கருதப்படும் குன்றிமணிக் கொடியும், "குன்றின் நெஞ்சுபக எறிந்த" என்றதனால், குறிஞ்சிக்கு உரிய மலையும் புலப்படுக்கப்பட்டுள்ளன. பாலைக்கெனத் SAA உரைகடைக் கோவை "" 37