பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை தனியே நில மின்மையாலும், "முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து... பாலை என்பதோர் படிவங் கொள்ளும் ஆதலானும், அம்முறையில் குறிப்பாக அந்நிலமும் புலப்படுக்கப்பட்ட தென்னலாம். குன்றி யையும் குன்றத்தையும் ஒரே அடியில் இயைய வைத்த குறிப்பும் இதனை வலியுறுத்துவ தாகும். ஈண்டு, குறிஞ்சியல்லா பொருள்களாலும், குறிஞ்சியை பெறவைத்தது, "சேயோன் மேய மைவரை யுலகமும் என்றபடி அந்நிலவுரிமை செவ்வேட்கு உள்ளது ஏனை நிலங்களைக் கருப் முதற்பொருளாலும் கருதியே. முருகவேளின் இளமையும், அழகும், வீரமும் சிறப்பு முறையில் கவிகளின் உள்ளத்தைக் கவர்வன வாம். "தாமரை புரையுங் காமர் சேவடி" என்பதனால் இளமைச் செவ்வி புலனாம். தாமரை இதழ் போன்ற மென்மையும், செம்மையும் ஈண்டு இளமையைப் புலப் படுப்பன. "பவழத் தன்ன மேனித் திகழொளி" என்றதனால் திருமேனி நிறமும் அந்நிறத்தில் விளங்கும் பேரொளியும் அழகைப் புலப்படுப்பன. ஒளியின் பெருமையை "முன்னே முருகனது வந்து எதிர் என்னும் "" தோன்றும் முருகனோ பெருகொளியால் பெரியார் மொழியானும் உணரலாம். குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" என்றதனால் வீரம் புலனாம். கால் தம் வேற்படை உலகம் கொடியவர்களால் துன்புறுங் கொண்டு பகையொழித்து இன்புறுத்தற்கு வீரம் இன்றியமையாதது ஆகலின், காத்தற் றொழிலுக்கு உதவியாக வீரம் முதற்கண் CG