பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 உரைநடைக் கோவை அடுத்துக் அரசர்க்கு கூறப்பட்டது. தெறலும் பட்டது. இன்றியமையாதனவாம். அந்நிலையில் தெய்வ அரசராகிய முருகவேட்குக் "காப்ப" என்றத னால் அளியும், குன்றின் நெஞ்சுபக எறிந்த என்றதனால் தெறலும் உள்ளன என ஆசிரியர் பெருந் தேவனார் புலப்படுத்துள்ளார். முருகவேளின் காவலிற் பட்டு உலகம் இன்பமயமான நாட்களை எய்துகின்றது என்னும் பொருள் தோன்ற, "காப்ப,ஏம வைகல் எய்தின்றாலுலகே என இவ்வாழ்த்து முடிக்கப் இதனால் மக்களுக்கு உரிய அன்பின் ஐந்திணை ஒழுக்கம் இந்நூல் நுதலிய பொருளாகும் என்பது குறிப்பிற் புலப்படுத்தவாறாம். இவ்வாழ்த் துப் பாடலில் மருத நிலத்துக் கருப்பொருள் முதலிலும் குறிஞ்சி முதற்பொருள் ஈற்றிலும் அமைந்துள்ளன. இதனால் "ஊடுதல் காமத்திற்கின்பம், அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்னும் முதுமொழிப்படி ஊடலும் கூடலும் முறையே நிகழும் இன்பவியல்பு புலப்படுக்கப்பட்டது என்பது போதரும். இங்ஙனம் இக்குறுந்தொகைக்கு அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல் நுண்பொருள் பலவற்றையும் தன்னகத்து அடக்கி நவில்தொறும் 56 அளியும் $9 நுண்ணுணர்வினோர்க்கு உணருந்தோறும் முருகன் திருவடி இன்பம் போன்ற பேரின்பத்தைப் பயத்தலால், இன்ப வூற்றாகத் திகழ்வதாகும். அன்பர்களே! இனி, இந்நூலின் உட்பகுதியில் நுழைந்து பல பொருள் நயங்களைப் பின்னே சொற்பொழிவாற்ற