பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை முன்வரும் புலவர் வாயிலாக உணர்ந்து இன்புறலாம். ஆயினும், நறுஞ்சுவைப் பொருளை நுகர்தற்கு வேட்கை விஞ்சினார், பின் அவர் காலந்தாழ்த்துத் தரும்வரை காத்திருத்தற்கு மனம் ஒருப்படுவாரல்லர். ஏதோ கைக்கெட்டிய அளவு முந்துற நுகர்தற்கு விரும்புதல் இயல்பே. அம்முறையிற் சிற்சில பகுதிகளை அறிவு கருவியாக நுகர்ந்து இன்புறலாமென நினைக்கின்றேன். இந்நூலின் இயல்பை விளக்கமாகப் பேச நினையின் மிக விரியும் ஆதலின், ஒரு சில நயங்களை மட்டில் ஆராயலாமென எண்ணுகின்றேன். அவை:- 1.உவமை யழகு, 2. குண வருணனை, 3. தேற்று முறை, 4.உள்ளுறை, 5. மக்கள் மனநிலை, 6. காதலின் இயல்பு என்பனவாம். இவையும் சுருங்கிய அளவில் முறையே கூறப்படும். 117 1. உவமை யழகு உள்ளத் அன்றி சங்க இலக்கியங்களுட் பெரும்பாலும் அமைந்த அணிகள் தன்மை நவிற்சியும் உவமையுமாம். பொருன் களைத் தெளிவுறுத்துவது உவமையாகும். ஒரு புடை யொத்தல் உவம் மெனக்கொண்டு துணர்வுக்குக் கொள்ளத்தக்க அளவின் உவமை கூறுவர் பிற்காலத்துப் புலவர். சங்கப் புலவர் காணும் உவமைகள், பொருளோடு ஒத்த தன்மையால் நெருக்கம் உடையனவாய் நின்று உணர்வுக்கு இன்பஞ் செய்வனவாம். அவற்றுள், இங்கே ஒரு சிலவற்றைக் குறிப்பிடுவேன். மனையாளை அஞ்சியொழுகும் ஓராடவன் இயல்பு, "கையுங் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும் என்று. ""