பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 உரைநடைக் கோவை

கொம்பையும் இறுத்துத் தானும் வீழும். அதுபோலத் தலைவியின் காதற் பெருங்கனியை, உரிய தலைவன் நுகர முற்பட்டிலனேல், அதற்கு ஆதாரமாகிய தலைவி யின் சிற்றுயிரையும் இறந்துபடச்செய்து தானுங் கெடு மென்பதும் இங்கே உணரத்தக்கது. இனி களவொழுக்கத்தில் தலைப்பட்டு மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், அவ்வேறு பாட்டிற்குரிய காரணத்தை வினாவியபொழுது, ஓர் இளம் பெண்ணால் இங்ஙனம் நேர்ந்ததென்று மகன் கூறியதாக ஒரு பாடல் உள்ளது. அது, தலை "சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யா அங்கு இளையள் முளைவா ளெயிற்றள் வளையுடைக் கையளெம் அணங்கி யோளே" என்பதாம். சிறிய வெள்ளிய பாம்பின் குட்டியானது காட்டில் திரியும் பெரிய யானையை வருத்தினாற்போல, நாணல் முளைபோன்ற கூரிய பற்களையுடைய ஓர் இள நங்கை என்னை வருந்தச் செய்தாள் என்பது இதன் பொருளாகும். மிகச் சிறிய கோலினாற் கொல்லத் தக்க பாம்புக் குட்டி மலைபோன்ற யானையையும் வருத்து மென்பதை, 64 அஞ்சனக் கோலி னாற்ற நாகமோ ரருவிக் குன்றிற் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி யெயிற்றிற் கொல்லும்' என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலும் அறியலாம். இங்கே, தலைவன் யானையைத் தனக்கு உவமையாகக் கூறியதனால், தலைமை யிலக்கணத்துக்குப் பொருந்தாத தற்புகழ்தல் பெறப்படுகின்றதே, அங்ஙனம் பெற