பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 உரைகடைக்' கோவை முறை மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென்றுங் கூறியுள்ளார்; கற்பரசியாகிய நினக்கு உயிர் அவராக, நின்னைவிட்டு எங்ஙனம் பிரிந்துறைவர் ? அவர் கொள் கைப்படி எவ்வாற்றானும் பிரிவாரல்லர்; வருந்தல் வேண்டா;ஆறுதலடைக' என்று தேற்றுவாளாயினள். இங்ஙனம் தேற்றும் அறிவாற்றல் உடையவளாகத் தோழியினுயர்வைப் புலப்படுத்திய கவியினுட்கோள் வியத்தற்குரியது. 4. உள்ளுறை இனி, அகப்பொருட் பகுதியிற் பேசு மக்கள், கருத் தைக் கருப்பொருள் வருணனையில் உள்ளுறை பொரு னாக அமைத்துக் குறிப்பிற் புலப்படுமாறு வலியுறுத் தலைப் பலவிடத்துங் காணலாம். இவ்வழகு தமிழ் மொழிக்கே சிறந்த தென்னலாம். செம்பொருளினுங் குறிப்புப் பொருள்களே அறிவுடையார்க்கு இன்பஞ் செய்வனவாம். தமிழ் மொழியிலுள்ள சங்கத்துச் சான்றோர் பாடல்களெல்லாம் பெரும்பாலுங் குறிப்புப் பொருள்களை உடையனவாகவே காணப்படுவன். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்று காட்டுவேன். தலைவி யின் இயைபு கருதி நள்ளிரவில் தலைமகன் வருதலை யறிந்த தோழி, வழியில் உறும் இடையூறுகளால் தலை வற்குத் தீங்கு நேருங்கொலோ என்றஞ்சி இரவில் வருதலை விலக்க முற்பட்டுக் கூறுமுகமாக, ஒரு பாடல் உள்ளுறை நயந்தோன்ற உள்ளது. அது, "கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக் கைம்மை யுய்பாக் காமரி மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குப்