128 உரைகடைக் கோவை வார் வேறொருவருமிலர்; தலைவர் ஒருவரே இருந்தனர்; அவரே தாம் கூறிய சூளுறவினின்றுந் தப்பியொழுகு வாராயின், யாஞ் செய்யத்தக்கது யாதுளது? அவ் விடத்து அவ்வமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது; அதுவும் ஓடும் நீரில் தானுண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது; காணாத தொன்றைப் பற்றிச் சான்றாதற்குத் தமிழ் நிலத்துப் புள்ளும் ஒருப் படாது; வாய்மை நெறி யொழுகும் இயல்பின தாக லின் என்று தலைவி கூறினளாம். இவ்வரிய கருத் தைப் புலப்படுத்தும் பாடல்:- "யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே என்பதாம். இங்கே தலைமகன், சான்றோர்க்குத் தகுதி யில்லாத அஃறிணைப் பொருளாகிய நாரையைக் குறித்துக் கூறியது எங்ஙனம் பொருந்தும்? எனிற் கூறுவேன். தமிழ் நிலத்துப் பெண் மக்களுடைய கற்பின் பெருமை குறித்து அவர் மண நிகழ்ச்சிக்கு அஃறிணைப் பொருள்களுள்ளும் நிலையியற் பொருள் களாகிய மர முதலியன சான்றாகிய நிகழ்ச்சி, சிலப்பதி காரத்திற் கண்ணகி யென்னுங் கற்பரசி வாயிலாக வெளிப்பட்ட, வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்"
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/136
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
