பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மணிமேகலை* மணிமேகலை யென்பாள், கோவலன் என்னும் வணிக குமரனுக்குக் காதற்கணிகையாகிய மாதவி பெற்ற மகளாவாள். அவள் வரலாறு கூறும் காப்பி யத்திற்கும் இதுவே பெயராகும். இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு யாண்டுகளுக்கு முன், சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம் பட்டி னத்தில், பெருங்குடி வணிகர் மரபில் தோன்றிய கோவலன் என்பான், அரசவையில் ஆடல் பாடல்களில் திறமை பெற்று அரங்கேறிய நாடகக் கணிகையாகிய மாதவி யென்பாளைக் காதலித்து, அவளுடனுறைந் தொழுகினனாக, அவனுக்கு அவள் மணிமேகலை என்னும் பெண்மணி நிகரற்ற அழகுவாய்ந்த இப்பெண்கள் திலகம் மங்கைப் பருவம் எய்தியிருக்கு நாளில், தன் அருமைத் தந்தையாகிய கோவலனும், பெற்ற தாயினும் உற்ற தாயாக மேற்கொண்ட கண்ணகியும் படாத துன்பங்

  • 25 - 1- 41- ல் திருச்சி வானொலியிற் பேசியது

வயிற்றில் பிறந்தனள்.