பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை தரிசிக்கச் செய்தது. இச் செய்தியை ஆசிரியர் மணி மேகலா தெய்வத்தின் கூற்றாக, .. 184* ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம் நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலிற் கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துரு வெண்களர் வீழ்வது போன்மென அறத்தின் வித்தாங் காகிய உன்னையோர் திறப்படற் கேதுவாச் சேயிழை செய்தேன் என்று கூறியதனால் அறியலாம். இங்கே மணி மேகலையை நோக்கிச் சிறந்த மணமுள்ள கந்தசாலி என்னும் நெல் வித்தை உவர்நிலத்தில் வீழ்த்து வீணாக் குதல் போல, அறத்தின் வித்தாகிய நின்னை இழி காமத்துக்கு இலக்காக்குதல் தக்கதன்று என்றெண்ணி, அறச்செல்வி யாக்குதற்கு ஏற்றது செய்தேன் என்னுங் கருத்துத் தோன்றக் கூறியது பாராட்டத்தக்கது. இனி, இந்நங்கையர் திலகம் மணிபல்லவம் என் னுந் தீவில் எதிர்ப்பட்ட தீவதிலகையென்பாள் உதவி யால் கோமுகி யென்னும் பொய்கையினின்றும் அமுத சுரபி யென்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்றாள். இப்பேறே மணிமேகலையின் அறச்செயற்குச் சிறந்த முதற் கருவியாயிற்று. தீவதிலகை, " குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவிஅது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கென்னா நிமிராது எனவும்.