மணிமேகலை "மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே எனவுங் கூறிய அறவுரைகளைக் கடைப்பிடித்து, அவ் வமுத சுரபியினின்றும் அள்ள அள்ளக் குறையாத உண்டியை எளிய மக்களுக்கு வழங்குதலாகிய பேரறத்தை மேற்கொண்டொழுகு வாளாயினள். இங் ஙனம் புரிந்த அறச்செயலில், ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்ற மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை 185
என்னும் உண்மை இவ்வம்மையால் மேற்கொள்ளப் பட்டது. செல்வமுடையார்க்குப் பல்வகைச் சுவை நிரம்பிய உணவுகளைப் படைத்தல் அறமாகாதெனவும், அஃது ஆரவார நீர்மையேயா மெனவும் உணர்ந்தமை யால், அம்முறை கைவிடப்பட்டுக் குருடர், முடவர், செவிடர்,ஆதரவில்லோர், நோய்த் துன்பமுடையோர் ஆகிய எளிய மக்களுக்கே இவளறம் பயன்படுவ தாயிற்று. இவ்வன்ன தானமாகிய அறம் புரிதற்கு ஏற்ற இடமாகக் காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள அறவி' என்னும் ஊரம்பலத்தைத் தெரிந் தடைந்தனள். உலக அங்கே உதயகுமரன் தன்மேற் காதலுடையவனாய் வருதலையறிந்து அவனால் இடையூறு நேரவுங்கூடு மென்று எண்ணிக் காயசண்டிகை என்னும் வித்தியா தரப் பெண்ணின் உருவத்தை மேற்கொண்டு, தன் அறச்செயலைப் புரிவாளாயினள். அவ்வமயம், காய சண்டிகையின் கணவனாகிய காஞ்சனன் என்பான், தன் மனைவியைக் காதலித்ததாகத் தவறுபட நினைந்து