பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை யுடையாரைத் திருத்தியதும் வியப்பை அளிப்பனவாம். ஒரு சமயம், காட்சியளவை ஒன்றனையே கடைப்பிடித்து அநுமானப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளாத பூதவாதியை யடுத்து இவ்வம்மை தேற்றிய முறை அரிதினும் அப்பூதவாதியை நோக்கி தந்தை தாயார் யாவரென், அரிது. நின் அம்மையார், அன்னாரை அவன் காட்டினனாக, "காட்சியளவை யொன்றனையே கடைப்பிடிக்கும் நினக்கு இவர் எப்படித் தந்தை தாயார் ஆவர்; காட்சியில் வைத்து எவ்வாறு காண முடியும்?" என வினவ, அவன் கலக்க முற்றுத், தன் கொள்கையைக் கடைப்பிடிக்கு நிமித்தம் தந்தை தாயரை ஏற்றுக்கொள்ளாது ஒழிப்பதா? அல்லது அவரை ஏற்றுக்கொள்ளு நிமித்தம் தன் கொள்கையை விட்டு ஒழிப்பதா? என்னும் ஊசலாட் டிற்கு ஆளாயினான். இங்ஙனம் தந்தை தாயரை விட்டொழிக்க மனம் வாராத அந்நிலையில் மணி மேகலை, 140 தந்தை தாயரை அனுமானத் தாலலது இந்த ஞாலத் தெவ்வகை பறிவாய் என்று தேற்றுவா ளாயினாள். 86 இவள், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை முதலியவற்றைப் பிறர்க்கு எடுத்துக் காட்டி நல்வழிப் படுத்துந் திறமையில் மிகச் சிறந்தவ ளென்பதற்கு இவ்வரலாற்றுப் பகுதியிற் கண்ட வேறு சில சான்று களும் உள. அவற்றுள், முன்னர்க் காம வேட்கையிற் சிக்குண்ட உதயகுமரனுக்கு இளமை நிலையாமையை அறிவுறுத்த எண்ணி, அப்பொழுது அங்கே இயல்பாக வந்த முதிர்பருவத்தினளாய ஒருத்தியைக் காட்டிப்,