பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேசுலை பண்டு வனப்புடையனவாக இருந்த அவள் உடல் உறுப்புக்கள் இப்போது வன்மை குறைந்து அழகிழந் திருத்தலைக் குறித்து, "தன்ணறல் வண்ணந் திரிந்துவே றாகி வெண்மண லாகிய கூந்தல் காணாய்” 66 141 என்பது முதலாக ஏனை யுறுப்புக்களின் வேறுபாட்டை யும் விளக்கிக் காட்டி முடிவில், பூவினுஞ் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத் தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே' என்று தெளிவுறுத்தியதொன்று. சாவக நாட்டரசனாகிய புண்ணியராசனைக் கண்டு, அவன் முற்பிறப்பில் ஆபுத்திரனாக இருந்து அருளறம் பேணிய செயலை எடுத்துக்காட்டி, அவனுக்கு நேர்ந்த மயக்கத்தைத் தெளிவித்துத் தருமோபதேசஞ் செய்து நன்னெறிப்படுத்தியது மற்றொன்று. இங்ஙனம் பல்லாற்றானும் பலர்க்கும் உதவி புரிந்து முடிவில் வஞ்சி நகரத்திற் சென்று, சமய வாதிகள் பற்பலரோடு வாதப்போர் நடத்தித் தள்ளுவன தள்ளிக், கொள்ளுவன கொண்டு காஞ்சி யம்பதிக்குச் சென்று, அறவண அடிகளை யடுத்துத் தத்துவ ஞானங் கைவரப் பெற்றுப் பவத்திறம் அறு கெனத் தவச் செயலில் தலைப்பட்ட மணிமேகலையின் சிறந்த வாழ்க்கை வரலாறு, அறிவுடை யுலகம் நன் னெறிப் படுவதற்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ள தென்பது தெளிவாம்.