பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 .. உரை நடைக் கோவை வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" எனவும், முறையை எந்நிலத்து மொழியாக

  • சிதைந்தன வரினும் இயைந்தன வரைபார்"

எனவும், வடசொல் தமிழில் வழங்கு வரையறுத்துக் கூறினர். வடமொழி மாந்தரும் மேற்கோடற்குரிய பொது உள்ளமையானும், பொதுப் பொருளில் வேண்டுமளவு கோடல் முறையாதலானும், கூடற் சங்கத்துக் குலவிய பண்டைப் புலவர் பெரு மக்களுட் பலர், வடமொழி யினும் வல்லராக இருந்து தமிழை வளர்த்தமையானும் அச்சங்க காலங்களில் மிகச் சுருக்கமாகத் தமிழில் வடசொற் கலப்பு உண்டாயிற்று. அங்ஙனம் வடசொற் கள் தமிழிற் கலக்குங்காலும் பொதுவெழுத்தான் இயன்ற சொற்களே தூய தமிழுருவெய்திப் பெரும் பாலும் விரவலாயின. நாளடைவிற் புலவர் தனித் தமிழ்ச் சொற்களைத் தெரிந்து வழங்கும் மதுகை யின்மையானும், ஒரோ வழித் தெரியினும் அவற்றினும் வடசொற் றொடை செவிக்கு இன்பம் பயப்பனவாம் என மாறுகொள் உணர்ந்தமையானும், தனித் தமிழ்ச் சுவை கண்டு இன்புறும் தலைவர் அருகினமையானும், வடமொழி யாளர் உவப்பத் தமிழிற் பாட்டு உரை முதலியன இயற்றவேண்டுமென்னும் விழைவு மேற்கொண்டமை யானும், பொதுவெழுத்தானும், சிறப்பெழுத்தானும் ஆய வடசொற்கள் பலவற்றைத் தமிழில் வரம்பின்றி வழங்கி வருவராயினர். சுவையுடைமை அவ்வம் மொழி