பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ராடைக் கோவை. பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமையல்லா தனவெல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்பு வினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன. " முல்லை யைக் குறிஞ்சியாக்கி மருதத்தை முல்லையாக்கி" என் னும் கம்பராமாயணச் செய்யுளை வடமொழிக்கண் மொழிபெயர்க்கப் புக்க வடமொழிப் புலமை மிக்க என் கண்பரொருவர் அத் திணைப் பாகுபாடு வடமொழிக் கண் இல்லாமையால்; "நல்லனவற்றைத் தீயனவாக்கி யும் தீயனவற்றை நல்லனவாக்கியும்" என்னும் பொருள் பட மொழிபெயர்த்துள்ளார். திணைப் பாகுபாடு வட மொழிக்கண் இல்லையாயினும் பொருளாராய்ச்சி வன் மையால், ஒருவாறு பொருந்த மொழிபெயர்க்கலாம். இயலாதென்பது அவர் கருத்துப் போலும். இன்னும் உற்றுநோக்குவார்க்கு இலக்கண அமைதியில் வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு பல தோன் றும். இவ் வேறுபாடுகளைச் சுருக்கி, 10 'சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும் வேற்றுமை கூறின் திணைபால் உணர்த்தும் வினைவிகுதி மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருபும் தேற்றிய லிங்கம் ஒரு மூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே' என்று பிரயோகவிவேக நூலார் கூறினார். வடமொழி தென்மொழி ஆராய்ச்சியிற் புலமை மிக்க மாதவச் சிவ ஞான முனிவர் இவ் வேறுபாடுகளை நன்கு ஆராய்ந்து தெளிவுபட உரைத்தனர். அவர் கூறியன வருமாறு:- கதமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும்,வினைக் குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை